Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை ரகுல் ப்ரீத்திசிங்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை ரகுல் ப்ரீத்திசிங்
, ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (08:19 IST)
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத்திசிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 
 
ரகுல் ப்ரீத்தி சிங் கடந்த 2011 ஆம் ஆண்டு யுவன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு அருண்விஜய் நடித்த தடையற தாக்க, புத்தகம், எண்ணமோ எதோ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். 
 
அதன் பின்னர் வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, கார்த்தியுடன் தேவ், செல்வராகவன் இயக்கிய என்ஜிகே உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது அவர் கமல்ஹாசனின் \இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புன்னகை நாயகி மனோரமா நினைவுதினம்!