Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹேப்பி பர்த்டே ஸ்ரேயா கோஷல்!

Advertiesment
Shreya Ghoshal
, செவ்வாய், 12 மார்ச் 2019 (12:33 IST)
ஸ்ரேயா கோஷல் தன் குயில் குரலால் பாடிய அத்தனை பாடல்களும் தேன் போன்று காதினுள் நுழைந்து இதயத்துக்குச் செல்வதோடு அங்கேயே தங்கி நம்மோடு பயணிக்கும் . 


 
இதை மெய்ப்பிப்பதைப் போல நான்கு தேசிய விருதுகள், தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருது என ஸ்ரேயா கோஷல் வீட்டு வரவேற்பரை விருதுகளால் குவிந்து கிடைக்கும்.
 
மேற்குவங்கத்தில் 1984-ம் ஆண்டு பிறந்த ஸ்ரேயா கோஷலின் பெற்றோருக்கு இருந்த இசை ஆர்வத்தால் நான்கு வயதிலிருந்தே மகேஷ் சந்திர சர்மா என்ற இந்துஸ்தானி இசைக்கலைஞரிடம் ஸ்ரேயாவை இசை கற்க வைத்தனர்.

webdunia

 
பிறகு தன் 16 வயதில் 'சரிகமப' என்ற இசை நிகழ்ச்சியில் ஸ்ரேயாவின் குரல் கேட்டுப் பிடித்துப்போன பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, 'தேவ்தாஸ்' படத்தில் வாய்ப்பு கொடுக்க முதல் படத்திலேயே 5 பாடல்களை பாடி நாடு முழுவதும் ஹிட் அடிக்கச்செய்தார். 
 
அதற்காக அவருக்கு தேசிய விருதும், ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தன. அதிலிருந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ஒவ்வொரு படத்திலும் ஸ்ரேயா கோஷல் பாடல் நிச்சயமாக இடம்பெற்றுவிடும்.

webdunia

 
தமிழில் 'ஆல்பம்' படத்தில் இடம்பெற்ற 'செல்லமே செல்லம் என்பாயடா' பாடல் தான் ஸ்ரேயா கோஷல் பாடிய முதல் தமிழ் பாடல். அதன்பிறகு 'முன்பே வா என் அன்பே வா' , வெயில் படத்தில் இடம்பெற்ற 'உருகுதே மருகுதே' இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று தனது 35வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாடும் தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் வெளியாகும் 'அர்ஜுன் ரெட்டி'