Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிக்பாஸ் குயின் நடிகை ஓவியாவின் ரீவைண்ட்!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (12:00 IST)
கேரளத்து பைங்கிளியான நடிகை ஓவியா தமிழில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான களவாணி படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமானார். கிராமத்து பெண்ணாக முதல் படத்திலே கியூட்டான நடிப்பை வெளிப்படுத்திய ஓவியாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக நாயகி விருது வழங்கி கௌரவித்தது விஜய் அவார்ட்ஸ்.

இதையடுத்து மெரினா, கலகலப்பு உள்ளிட்ட படங்கள் சிறப்பான வெற்றிப்படமாக அமைந்தது. அவரது உண்மையான குணத்தை போலவே படங்களிலும் எந்த வித seriousnessம் இல்லாமல் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். பின்னர் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று அந்த நிகழ்ச்சியை பெரும் பிரபலமாக்கி அனைவரையும் டிவி முன்பு அமர வைத்தது ஓவியாதான். ஒரே ஒரு banana கொடுங்க பிக்பாஸ், கொக்கு நட்ட கொக்கு நட்ட , நீங்க shut up பண்ணுங்க , மருத்துவ முத்தம் இப்படி அந்த சீசனின் முழு வெற்றிக்கும் ஓவியா தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்த 90ml படம் பெரும் சர்ச்சையை சந்தித்து ஓவியாவின் பெயரை கெடுத்தது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கூலாக தனது அடுத்தடுத்த படங்களில் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று தனது  29வது பிறந்தநாளை ஓவியா கொண்டாடுகிறார். அவருக்கு ஓவியா ஆர்மிஸ், நண்பர்கள் , பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து ஊறி வருகின்றனர். ஹேப்பி பர்த்டே ஓவியா வாழ்த்துக்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments