Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுமையில் வாடிய நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்த நடிகர் விஜய்!

Vijay fans
Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (11:57 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் சாதாரண தினக்கூலி வேலை செய்யும் மக்களுக்கு ஒரு நாள் பொழுதே திண்டாட்டமாக செல்கிறது. இதையடுத்து இருப்பவர்கள் இயலாதோருக்கு கொடுத்து உதவி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவி வழங்கி வருகின்றனர். மேலும், அஜித், விஜய், ரஜினி, சூர்யா, தனுஷ், யோகிபாபு உள்ளிட்ட பிரபலங்களின் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவியை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது அமீன், கண்சுலாபீவி என்ற தம்பதிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டு தேனியில் குடியேறி உள்ளனர் . இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் அமீன் வேலை செல்லமுடியாமல் தன் 5 மாத கர்ப்பிணி மனைவியின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார். இந்த தகவலை தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனைப்படி ரூ 5,000 பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments