Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா…. வாழ்த்துகளைப் பகிர்ந்த ரசிகர்கள்!

வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா…. வாழ்த்துகளைப் பகிர்ந்த ரசிகர்கள்!
, புதன், 2 நவம்பர் 2022 (14:48 IST)
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள்.

இந்நிலையில் விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக ஹன்சிகா குடும்பத்தின் நண்பர் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து இப்போது முதல் முறையாக வருங்கால கணவர் சோஹைல் கதூரியாவின் புகைப்படத்தை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பாரிஸின் ஈபிள்டவரில் தன் காதலை சோஹைல் வெளிப்படுத்த, ஹன்சிகா வெக்கத்தில் சிவக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர, அது வைரல் ஆகி வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் பதான் டீசர் ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்