பப்ளிசிட்டிக்காக அந்தரங்க போட்டோவை வெளியிட்டார் என்று பரவிய செய்தியைக் கேட்டு ஹன்சிகா அப்செட் ஆகியுள்ளாராம்.
நடிகை ஹன்சிகா உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படம் சமீபத்தில் இணையத்தளத்தில் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது. பின்னர் தனது போன் மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டுவிட்டது அதனை அது சரி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்று ஹன்சிகா கூறினார்.
பப்ளிசிட்டிக்காக இப்படி செய்துவிட்டு ஹன்சிகா கதை விடுகிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஹன்சிகா எனது அந்தரங்க போட்டோக்கள் லீக் ஆனது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போட்டோ 4 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. போட்டோ லீக் ஆனது ஒரு பக்கம் கவலை என்றால் நான் வேண்டுமென்றே தான் இப்படி செய்தேன் என பலர் விமர்சிப்பது அதிக கவலையை ஏற்படுத்துகிறது. பப்ளிசிட்டிக்காக இப்படி போட்டோவை வெளியிட வேண்டிய அவசியம் எனக்கில்லை என அவர் கூறினார்.