Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்மினி படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் மீது வழக்குப் பதிவு செய்த தயாரிப்பாளர்!

vinoth
புதன், 14 ஆகஸ்ட் 2024 (09:34 IST)
இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் இயக்கிய பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இதையடுத்து கடைசியாக இயக்கிய ஏலே திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இந்நிலையில் 2015 ஆம் ஆண்டே அவர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட மின்மினி திரைப்படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பவை. முதல் பாதியில் கதாபாத்திரங்கள் குழந்தைகளாகவும், இரண்டாம் பாதியில் அவர்கள் வளர்ந்த பின்னரும் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.  குழந்தைப் பருவ காட்சிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கிய நிலையில் படத்தில் நடித்த குழந்தைகள் வளருவதற்காக 7 ஆண்டுகள் காத்திருந்தனர். குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் அந்த படத்தின் மீதக் காட்சிகள் கடந்த ஆண்டு முடிந்தது.

இதையடுத்து சமீபத்தில் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையில் இதே பெயரில் 2020 ஆம் ஆண்டே ஒரு படம் சென்சார் செய்யப்பட்டு விட்ட நிலையில், அதே பெயரில் படம் ரிலீஸானதால் தனக்கு 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மின்மினி படத்தின் மற்ற பிஸ்னஸ்கள் பாதிக்கபப்ட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments