இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

Bala
செவ்வாய், 18 நவம்பர் 2025 (20:37 IST)
நடிகை நயன்தாராவின் பிறந்த நாளான இன்று அவர் கவினுடன் சேர்ந்து நடிக்கும் ஹாய் படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. கிஸ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கவின் நடிக்கும் திரைப்படம் தான் ஹாய். கிஸ் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
 
அந்த படத்திற்கு பிறகு கவின் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.அதில் ஒன்றுதான் இந்த ஹாய் திரைப்படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கிறார். சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதுமே இது ஒரு வேளை அக்கா தம்பி கதையை மையப்படுத்தி உருவாகும் படமாக இருக்குமோ என்று விவாதிக்கப்பட்டது.
 
இன்னொரு பக்கம் தன் வயதில் மூத்த ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு ஹீரோ பற்றிய படமாக இருக்குமோ என்றும் விவாதிக்கப்பட்டது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறார்கள் .ஏற்கனவே இந்த படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்தது. அதில் ஒரு போஸ்டரில் மொட்டை மாடியில் லுங்கியுடன் கவினும் நயன்தாராவும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் மாதிரியான புகைப்படம் வெளியானது.
 
இன்னொரு போஸ்டரில் மேல் தளத்தில் நயன்தாராவும் கீழே கவின் நின்றவாறு ஒரு போஸ்டர் வெளியானது. இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார். இவர் லோகேஷ் கனகராஜின் உதவியாளராக பணியாற்றியவர். இவர் ஏற்கனவே பாடலாசிரியராகவும் ஒரு சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஹாய் படத்தின் மூலம் இயக்குனராக விஷ்ணு எடவன் அறிமுகமாகி இருக்கிறார்.
 
இந்த நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் ஹாய் படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் நயன்தாரா நடுவில் நிற்க அவருக்கு பின்புறம் சுவரில் ஒரு பக்கம் ரஜினி புகைப்படமும் இன்னொரு புறம் கமல் புகைப்படமும் இருக்குமாதிரியாக அந்த போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments