Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (07:28 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படம் ஒரு அரசியல் கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான இறுதி திரைக்கதையை இப்போது இயக்குனர் ஹெச் வினோத் கேரளாவில் முகாமிட்டு எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments