Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

vinoth
வெள்ளி, 17 மே 2024 (07:21 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை முடித்ததும் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். 

இந்த படத்துக்கு சிக்கந்தர் என டைட்டில் வைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஷூட்டிங் தொடங்கி அடுத்த ஆண்டு ரம்ஜானில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு முருகதாஸ் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments