Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை தான் அடுத்த மங்காத்தா.... ஒரே வார்த்தையில் படத்தின் தரத்தை சொன்ன எச்.வினோத்!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (10:52 IST)
தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தில் நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே பணியாற்றுகிறார்கள்.

அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்துள்ள வலிமை படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாள் அன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் எச். வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில்  திடீரென வலிமை படத்தை பற்றி பதிவிட்டுள்ளார். அதவது " அஜித் நடித்த படங்களிலேயே எனக்கு பிடித்தது மங்காத்தா படம் தான், வலிமை படம் மங்காத்தா படத்தை போலவேதான் இருக்கும். அவ்வளவு ஏன் "வலிமை இன்னொரு மங்காத்தா.. அதற்காக காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments