Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் வினோத் இணையும் படத்தின் நிலை என்ன?... லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (09:06 IST)
ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கமல் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. படத்துக்காக வெறும் 35 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் தேதிகள் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்த இயக்குனர் வினோத், திரைக்கதையை விவரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கமல், இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு அமெரிக்கா செல்ல உள்ளதாகவும், அங்கிருந்து திரும்பியதும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments