Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ருத்ர தாண்டவம் டிரெய்லரைப் பகிர்ந்த ஹெச் ராஜா!

Advertiesment
ருத்ர தாண்டவம் டிரெய்லரைப் பகிர்ந்த ஹெச் ராஜா!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (09:34 IST)
மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

திரௌபதி படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரௌபதி படத்தில் தலித் மக்களின் மீதான் வன்மம் வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் கிறிஸ்துவ மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதை டிரெய்லர் காட்டுகிறது. இதனால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த டிரெய்லரை ஹெச் ராஜா பகிர்ந்து ‘தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வந்துள்ள #ருத்ரதாண்டவம் வெற்றி பெற்றிட எனது வாழ்த்துக்கள்’ என வாழ்த்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட வில்லன் நடிகரை பாராட்டிய வெங்கட்பிரபு