Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருத்ர தாண்டவம் படத்தை பார்த்து பாராட்டிய ஹெச் ராஜா!

ருத்ர தாண்டவம் படத்தை பார்த்து பாராட்டிய ஹெச் ராஜா!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:10 IST)
திரௌபதி இயக்குனர் மோகன் அடுத்ததாக இயக்கும் படமான ருத்ர தாண்டவம் இந்த மாதம் வெளியாக உள்ளது.

திரௌபதி படத்தின் மூலமாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார்.

”ருத்ர தாண்டவம்” என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் திரௌபதி படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட்ஸ், கௌதம் மேனன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரௌபதி படத்தில் தலித் மக்களின் மீதான் வன்மம் வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் இந்த படத்தில் கிறிஸ்துவ மதத்தை விமர்சனம் செய்யும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளதை டிரெய்லர் காட்டுகிறது. இதனால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தனது படத்தை பாஜக பிரமுகரான ஹெச் ராஜாவுக்கு போட்டுக் காட்டியுள்ளார் மோகன் ஜி. படத்தைப் பார்த்த ஹெச் ராஜா ’திரௌபதி படத்தை விட பல மடங்கு வெற்றி பெறும் என பாராட்டியுள்ளார்.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டுக்குள் பிரபல சினிமா விமர்சகர்!