Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் புகார்களை விசாரிக்க குழு: நடிகர் சங்கம் அறிவிப்பு

Advertiesment
பாலியல் புகார்களை விசாரிக்க குழு: நடிகர் சங்கம் அறிவிப்பு
, செவ்வாய், 30 அக்டோபர் 2018 (12:16 IST)
‘மீடூ’ ஹேஷ்டாக்கில் நடிகைகள் பாலியல் புகார்கள் கூறுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சூழலில், இன்று (29.10.2018) நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த சிறப்பு செயற்குழுவில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்.

அத்தீர்மானங்கள் வருமாறு: கலைஞர்களின் உரிமைகளும், சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட "விசாகா குழு" செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும் .
 
இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மையான மகளிர் உட்பட, பலர் இருப்பார்கள். கலைஞர்களின் பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார்.
 
அதற்கு ஆண்பால்-பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகள் காணப்படும்.
 
படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரண்டர் ஆனார் முருகதாஸ் –சர்கார் சமாதானம் பின்னணி