Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்மவீரருக்கு வணக்கங்கள் --- நடிகர் கமல் டுவீட்

Advertiesment
கர்மவீரருக்கு வணக்கங்கள் ---  நடிகர்  கமல் டுவீட்
, வியாழன், 15 ஜூலை 2021 (16:18 IST)
தமிழக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பெருந்தலைவர் காமராஜரின் 116 வது பிறந்தநாள் இன்று. எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவரது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்மவீரருக்கு வணக்கங்கள் என்று கூறி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், கல்வி என்கிற ஒன்றை, வலியுறுத்தித் தந்ததன் மூலம் மாநிலத்தை முன்னணிக்குக் கொண்டுவந்த பெருந்தகையாளர் காமராஜர். இன்றிருப்பவர்களும், இனிவரும் தலைமுறையும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்வு அவருடையது. கர்மவீரருக்கு வணக்கங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு வில்லனாக ஆசைப்பட்டேன்… ஆனால் நடக்கலை - விஜய் சேதுபதி வருத்தம்!