Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல’ - அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் பிரியாமணி

’நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல’ - அமலாபாலுக்கு ஆதரவளிக்கும் பிரியாமணி
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (03:33 IST)
அமலாபால் விவாகரத்து செய்துகொள்ள இருப்பது குறித்து கருத்து தெரிவித்த நடிகை பிரியாமணி சமூகத்துக்காக நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.
 

 
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் விவாகரத்து வழக்கு தொடர தயாராகி வருகிறார்கள்.
 
இந்நிலையில் இது கருத்து கருத்து தெரிவித்துள்ள நடிகை பிரியாமணி, “வேலைக்கு போகும் பெண்கள் சாதிக்கிறார்கள். நிறைய திறமைகளையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். திருமணமான பெண்கள் குடும்பத்தையும் தொழிலையும் நன்றாக கவனிக்கின்றனர்.
 
நடிகைகளை பொறுத்தவரை அவர்களுடைய சினிமா வாழ்க்கை திருமணத்துக்கு பிறகு முடிவுக்கு வந்து விடும் என்றும் ரசிகர்கள் குறைந்து விடுகிறார்கள் என்றும் கணிப்பு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமைகள் மாறி வருகிறது.
 
திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதனை நிகழ்த்துகிறார்கள். இந்தியில் கரீனா கபூர், வித்யாபாலன் போன்றோர் திருமணம் செய்துகொண்ட பிறகு நிறைய படங்களில் நடித்து சிறந்த நடிகைகளாக வலம் வருகிறார்கள்.
 
ஜோதிகாவும் நடிக்கிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்துக்கொண்டு இருக்கிறார். எனவே நடிகைகள் திருமணம் ஆனதும் நடிப்பதை விட்டுவிட வேண்டும் என்பது பழைய சிந்தனை. சமூகத்துக்காக நடிகைகளின் கனவுகளை கொலை செய்வது சரியல்ல” இவ்வாறு பிரியாமணி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டி.எஸ்.சேதுராமன் காலமானார்