Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

"கவுண்டம்பாளையம்" திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 9 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது- நடிகர் ரஞ்சித்!

Advertiesment
Goundampalayam movie

J.Durai

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (14:38 IST)
சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு நாளையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அரூர்-திருப்பத்தூர் சாலையில் திருமண மண்டபத்திலீ உள்ள தியாகி தீரன் சின்னமலை சிலை அருகில், வைக்கப்பட்ட உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
இதனைத் தொடர்ந்து அரூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித்......
 
நாடக காதலால் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து,தான் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் திரைப்படம் பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு வரும் 9 தேதி திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது. 
 
நாடக காதல் என்பதே ஒரு நடிப்பு. சைக்கிள், கார ,பைக், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக இருப்பவர்களை தவறாக புரிந்து கொண்டு காதலர்கள் தவறாக தேர்வு செய்கின்றனர்.
 
காதலர்கள் நல்ல காதலை தேர்ந்தெடுக்க வேண்டும். 
கவுண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். 
 
இந்த  திரைப்படத்தில் எந்த சமூகத்தினரின்  மனம் புண்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மினி ஸ்கர்ட் உடையில் ஸ்டன்னிங்கான புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட லாஸ்லியா!