Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணி & யோகி பாபு நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

கவுண்டமணி & யோகி பாபு நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
vinoth
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:19 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கவுண்டமணி காமெடிகளுக்கு ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் யோகி பாபு கவுண்டமணியுடன் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் மூலமாக யோகி பாபு கவுண்டமணியோடு முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். கவுண்டமணி கதாபாத்திரத்தின் அளவுக்கு இந்த படத்தில் யோகி பாபுவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் கோடை விடுமுறையில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பிந்து போஸுக்கு கே.பி.ஒய் பாலா வழங்கிய உதவி.. ஷகிலா எடுத்த பேட்டி..!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

எகிறிய கடன்! நடிகர் திலகம் சிவாஜியின் வீடு ஜப்தி! - நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments