Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணிக்காக சிறப்புத் தோற்றத்தில் சிவகார்த்திகேயன்? புதுப்பட லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (15:47 IST)
தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.

இப்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் தொலைக்காட்சிகள், இணையம், மீம்ஸ் வாயிலாக இன்னமும் ரசிகர்களின் தினசரி வாழ்வில் அவர் இருந்துகொண்டேதான் இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும், இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுண்டமணி ஓய்வு பெற்ற உடல்கல்வி ஆசிரியராக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கவுண்டமணிக்காக சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments