Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவுடன் முதலில் விளம்பர படம் பின்னர் திரைப்படம்: சரவணா ஸ்டோர் அதிபரின் பலே திட்டம்!

நயன்தாராவுடன் முதலில் விளம்பர படம் பின்னர் திரைப்படம்: சரவணா ஸ்டோர் அதிபரின் பலே திட்டம்!

Advertiesment
நயன்தாராவுடன் முதலில் விளம்பர படம் பின்னர் திரைப்படம்: சரவணா ஸ்டோர் அதிபரின் பலே திட்டம்!
, சனி, 29 ஏப்ரல் 2017 (16:20 IST)
நம்பர் ஓன் நடிகையாக திகழும் நயன்தாரா உடன் சரவணா ஸ்டோர் அதிபர் விளம்பரம் ஒன்று நடிக்க உள்ளதாகவும் அதற்கு பல கோடி ரூபாய் நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.


 
 
விளம்பரத்தில் நடித்து வந்த சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், தன்னுடைய முதல் படத்துக்கு நயன்தாரா தான் ஹீரோயின் எனவும் கூறியதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதனை சரவணா மறுத்ததாகவும் தனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இல்லை எனவும் கூறியதாக தகவல்கள் வந்தன.
 
இந்நிலையில் நடிகை நயன்தாரா உடன் சரவணா ஜவுளிக்கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக நயன்தாராவுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கும் இந்த விளம்பரத்துக்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்கலாம் என திட்டமிட்டிருப்பதாக சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதற்கு மேலும் தாங்குவாரா உச்ச நட்சத்திரம்?