வசமாக சிக்கிய கோபி… பாண்டியன் ஸ்டோர்ஸ்- பாக்கியலட்சுமி சங்கமத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (09:37 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் சங்கமம் எபிசோட் ஒளிபரப்பாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கோபி கதாபாத்திரம் சமூகவலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு மீம் மெட்டீரியல் ஆகியுள்ளது. இந்த சீரியலில் கோபி பாக்யாவை திருமணம் செய்துகொண்டும், ராதிகாவைக் காதலித்துக் கொண்டும் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு தரப்பிற்கும் தெரியாமல் கோபி தில்லு முல்லு வேலைகள் செய்து தப்பித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸுடன் இணைந்து சங்கமம் எபிசோட் ஒளிபரப்பானது. இதையடுத்து இந்த புதிய எபிசோடில் கோபி- ராதிகா காதல் விவகாரம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்துள்ளது. இது சம்மந்தமான ப்ரோமோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments