Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுள் குட்டப்பா டீசரை வெளியிடும் பிரபல நடிகர்!

கூகுள் குட்டப்பா டீசரை வெளியிடும் பிரபல நடிகர்!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:18 IST)
கூகுள் குட்டப்பா டீசரை வெளியிடும் பிரபல நடிகர்!
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ’கூகுள் குட்டப்பா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கூகுள் குட்டப்பா’ படத்தின் டீசர் ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கேஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தை சபரி கணேசன் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில்  தர்ஷன், லாஸ்லியா யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும், இந்த படத்திற்கு ப்ரவீன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் வெளியானது சர்ச்சைக்குரிய ஃபேமிலி மேன் வெப் சிரிஸ்!