Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

Mahendran
வியாழன், 27 மார்ச் 2025 (18:14 IST)
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் 'குட் பேட் அக்லி'. இதில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' வரவிருக்கும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும்.
 
‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பின்னணி இசை தொடர்பான புதிய தகவலை ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர், "பின்னணி இசை நிறைவடைந்து விட்டது. படம் வெளியீட்டிற்கான இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
 
#GoodBadUgly இசை  முழு ஆற்றலுடன் உருவாகியுள்ளது. மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இசையமைப்பாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments