Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் 'குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது? சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (11:50 IST)
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இன்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
அஜித் - திரிஷா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி’. இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இன்று டிரெய்லர் வெளியாகும் என்ற அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்றும், வசூலில் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்ய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments