Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் வினோத் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?

கமல் வினோத் படத்துக்கு இசையமைப்பாளர் இவரா?
, வியாழன், 6 ஜூலை 2023 (08:40 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், அவரின் சம்பளம் பல மடங்கு உயர்ந்து இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தியன் 2 ஷூட்டிங்கை விரைவில் முடிக்க உள்ள கமல் அடுத்து பிராஜக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘கமல் 233’ படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பதை தவிர வேறு எந்த கலைஞர்கள் பற்றிய தகவலும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிப்ரான் ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் வினோத் ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனை சந்தித்த போது நடுங்கினேன்… ஃபேன்பாய் தருணத்தைப் பகிர்ந்த ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி!