Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகிழ்ச்சிக்கு இதில் ஈடுபடுங்கள் - கார்த்தி பட நடிகை அறிவுரை

Advertiesment
மகிழ்ச்சிக்கு இதில் ஈடுபடுங்கள் -  கார்த்தி பட நடிகை அறிவுரை
, புதன், 9 ஜூன் 2021 (23:26 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.

இந்நிலையில், கொரொனா கால ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு சுல்தான் பட நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு அறிவுரை கூறியுள்ளார்.

அதில், எனது தோழி எனக்குக் கூறியதை நான் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்களுக்கு எந்த விஷயம் மகிழ்ச்சி தருகிறதோ அதில் ஈடுபடுங்கள்….அவை பணம் அல்லது அறிவு தரும் துறைகளாகக் கூட இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் இன்றைய சென்சேஷனல் ஹீரோயின் ராஷ்மிகா தான். இவரைப் படத்தில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் நடிகளும் தயார் நிலையில் உள்ளனர். இவரது சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளே உள்ளனர்.

இவர் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாருடன் மோதும் ’’செஸ் சாம்பியன்’’ விஸ்வநாதன் ! ஏன் தெரியுமா?