Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் அர்னால்டைப் பார்க்கவே இல்லை – மோசமான பேட்மேன் படம் குறித்து ஜார்ஜ் க்ளூனி!

நான் அர்னால்டைப் பார்க்கவே இல்லை – மோசமான பேட்மேன் படம் குறித்து ஜார்ஜ் க்ளூனி!
, திங்கள், 21 டிசம்பர் 2020 (09:33 IST)
மோசமான பேட்மேன் திரைப்படத்தில் நடித்தது குறித்து ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளுனி பேசியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் அண்ட் ராபின் திரைப்படம்தான் பேட்மேன் வரிசை திரைப்படங்களிலேயே மிகவும் மோசமானதாகவும், தோல்வி அடைந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜார்ஜ் க்ளுனியும் வில்லனாக அர்னால்டும் நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார் ஜார்ஜ் க்ளூனி.

அதில் ‘நான் அந்த படத்தில் எதையும் மாற்றியிருக்க முடியாது. ஏனென்றால் அப்போது நான் சாதாரண நடிகனே. அர்னால்டுக்கு அந்த படத்துக்காக 25 மில்லியன் டாலர் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான் அவரை படப்பிடிப்பில் சந்திக்கவே இல்லை. எங்களுக்கு இடையே பொதுவான  காட்சிகளே இல்லை. அவர்கள் சொன்னதை அப்படியே நான் செய்தேன். அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அதில் மோசமாக பணியாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாவை நம்பி தான் ஆடுறா... நாமினேஷனில் பலமா சிக்கிய ஷிவானி!