Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெண்டில் மேன் 2 படத்தில் இணைந்த தேசிய விருது கலைஞர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (09:46 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து 1993ல் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமாகும். மதுபாலா, சுபஸ்ரீ, செந்தில், கவுண்டமனி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இந்த படம் அப்போதைய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றது. புதுமுக இயக்குனர் ஷங்கரை நம்பி அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்தார் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்.

அதுமட்டுமில்லாமல் அவர் அதன் பிறகு தயாரித்த எல்லா படங்களுமே அதிக பட்ஜெட் படங்கள்தான். ஒரு கட்டத்தில் தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த கோடீஸ்வரன் என்ற பெயரில் இமாலய பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி, அது பாதியிலேயே நின்றதால் மிகப்பெரிய இழப்புக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் ஷங்கருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்த குஞ்சுமோனுக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை.
இதனால் நீண்டகாலமாக படத்தயாரிப்புகளில் ஈடுபடாத அவர் , தற்போது ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது “ஜெண்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்  மூலமாக தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் இயக்குனராக கோகுல் பிரசாத் என்பவரும், இசையமைப்பாளராக மரகதமணியும் நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்பவரும் அறிவிக்கப்பட்டுளனர்.  அதுபோல இப்போது படத்தின் ஒளிப்பதிவாளராக அஜயன் வின்செண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் கலை இயக்குனராக தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தோட்டா தரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை குஞ்சுமோன் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ஹீரோ யார் என்பதை அறிவிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐமேக்ஸ் பார்மெட்டில் வெளியாகும் புஷ்பா 2… படக்குழு அறிவிப்பு!

விரைவில் உருவாகிறது ஸ்லம்டாக் மில்லியனர் 2… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

அனைவரிடமும் வெற்றிடம் உள்ளது… திரைப்பட விழாவில் ரஹ்மான் பேச்சு!

திரையரங்குகளில் கண்டுகொள்ளப் படாத ‘பிளடி பெக்கர்’ ஓடிடி ரிலீஸாவது கவனம் பெறுமா?

ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 முதல் பார்வை.. ஷூட்டிங்குக்குத் தயாரான படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments