Webdunia - Bharat's app for daily news and videos

Install App

550 மில்லியன் பார்வைகள்…. KGF 2 பாடல்கள் படைத்த சாதனை!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (09:40 IST)
கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குப் பிறகான ரிலீஸில் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில் வெளியாகி இதுவரையில் திரையரங்குகள் மூலமாக சுமார் 1200  கோடி ரூபாக்கும் மேல் கேஜிஎப் 2 வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி 2, டங்கல் ஆகிய படங்களுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் இந்த படத்தின் வசூல் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளன. இந்த படத்தின் பாடல்கள் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 550 மில்லியன் பார்வைகளை யுடியூபில் கடந்துள்ளன. இதை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments