Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய காயத்ரி; அட்வைஸ் கொடுத்த கமல்!

Advertiesment
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய காயத்ரி; அட்வைஸ் கொடுத்த கமல்!
, திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (11:43 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று காயத்ரி ரகுராம் வெளியேற்றப்பட்டார். நேயர்கள் அளித்த வாக்குகளோடு வீட்டில் இருப்பவர்கள் அபிப்ராயத்தின்படியும் அவர் வெளியேற்றப்பட்டார். நேயர்களின் கணிசமான வாக்கு காயத்ரிக்கு எதிராக இருந்தது.

 
 
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நிறைய அட்வைஸ் கொடுத்த கமல், வெளியேறியப்பிறகும் அட்வைஸ் கொடுத்தார். "கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள், மற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்" என்றார். 
 
கமலுடன் பேசிய காயத்ரி நான் கொஞ்சம் முன்கோபக்காரிதான். அதனால் என்னை இந்த நிகழ்ச்சிக்கே அனுப்ப வீட்டில் பயந்தார்கள். வெளியேறும் கடைசி நாளில்தான் இந்த நிகழ்ச்சி பற்றி முழுமையாக புரிந்து கொண்டேன். நான் யாரையும் மனதால் காயப்படுத்தவில்லை. கோபத்தில் ஏதாவது சொல்லியிருப்பேன். இன்னொரு முறை பிக் பாஸ் வீட்டுக்குள் வர  மாட்டேன். அனுபவம் ஒரு முறை இருந்தால் தான் ரசிக்க முடியும்.
 
கூட்டத்தின் கேள்விகளை விதம்விதமாக சமாளித்த காயத்ரி, சமாளிக்க முடியாத இடங்களில் மன்னிப்பு கேட்ட காயத்ரி, கமல் கேட்கும் போது மட்டும் உடனடியாக நிபந்தனையின்றி சரணடைந்து விடுகிறார். ‘தலைவாரும் போதெல்லாம் உங்களுக்கு நீங்கள் சொன்ன கெட்ட வார்த்தை நினைவிற்கு வர வேண்டும்’ என்று நுட்பமாக காயத்ரியின் கெட்ட வார்த்தை வழக்கத்தை  சுட்டிக் காட்டிய போது ‘சார் இனிமே தலையே வார மாட்டேன்’ என்றார்.
 
மேலும் என்னை நான் புரிந்து கொள்ளவும், மற்றவர்களை புரிந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சி உதவியாக இருந்தது என்று  கூறினார் காயத்ரி ரகுராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா: கபாலி, பாகுபலி 2 படங்களை அடுத்து 3வது இடத்தை பிடித்த 'விவேகம்'