Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலிவு மனப்பான்மை கொண்ட ஏ.வி.ராஜு".. அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? காயத்திரி ரகுராம்!

Advertiesment
மலிவு மனப்பான்மை கொண்ட ஏ.வி.ராஜு

Mahendran

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (18:01 IST)
சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட  ராஜு என்பவர் எடப்பாடி பழனிசாமி மீது பல குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து நிலையில் பிரபல நடிகை ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். 
 
இந்த நிலையில் நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில்   நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் இந்த விவகாரத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
இந்த மலிவு மனப்பான்மை கொண்ட நபருக்கு ஏன் திமுகவை சேர்ந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன? ஏன் அவரை நடிகைகள் மற்றும் பெண்களை பற்றி மலிவாக பேச அனுமதித்தார். ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் இப்படிப்பட்டவர்களை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
 
அவர் இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள். NCW அமைதியாக இருக்கிறது, குஷ்புவும் அமைதியாக இருக்கிறார். ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன், இதுபோன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகையையும் நான் ஆதரிக்கிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூவத்தூர் விவகாரம் குறித்து பேட்டி அளித்த ராஜூ.. பதிலடி கொடுத்த த்ரிஷா