தனுஷ் நடிப்பில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’படத்தைக் கையிலெடுத்துள்ளார் கெளதம் மேனன்.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியாக நடித்தார். தர்புகா சிவா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சிலபல காரணங்களால் இந்தப் படம் பாதியிலேயே நிற்கிறது.
இதை விட்டுவிட்டு, விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிய கெளதம் மேனன், அந்தப் படத்தை கிட்டத்தட்ட முடிக்கும் தருவாய்க்கு வந்துவிட்டார். ஆனால், அதை முடிக்காமல் ஏனோ பாதியில் நின்றுபோன தனுஷ் படத்தைக் கையில் எடுத்துள்ளார்.அடுத்த மாதம் முதல் தனுஷ் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. தற்போது தனுஷ் படத்துக்கு லொகேஷன் பார்க்கும் பணிகளில் பிஸியாக இருக்கிறார் கெளதம் மேனன்.