கௌதம் மேனன் தான் இயக்கியுள்ள பாவக்கதைகள் படத்தில் சிம்ரனுடன் நடித்தது பற்றி பேசியுள்ளார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இயக்குனர் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பல படங்களில் தோன்றி வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த டிரான்ஸ் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இந்நிலையில் இப்போது அவர் இயக்கியுள்ள  வான் மகள் (பாவக்கதைகள் ஆந்தாலஜியில் ஒரு படம்) அவரே நடித்துள்ளார். அதில் சிம்ரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் சிம்ரனுடன் நடிப்பது குறித்து பேசியுள்ள அவர் சிம்ரன் போன்ற அனுபவம் மிக்க நடிகருக்கு முன் நடிப்பது அவ்வளவு எளிதில்லை. ஆனால் இப்போது என் தன்னம்பிக்கை கூடியுள்ளது. இனிமேல் நான் நடிப்பில் தீவிரமாக இறங்கலாம். என் படத்திலேயே கூட நடிக்க வாய்ப்புண்டு எனக் கூறியுள்ளார்.