Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக கிராமத்து பக்கம் செல்லும் கெளதம் மேனன்!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:36 IST)
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் ஏற்கனவே நான்கு திரைப்படங்களை கையில் வைத்துள்ளார் என்பது தெரிந்ததே. துருவ நட்சத்திரம்,  வேட்டையாடு விளையாடு 2,  விண்ணைத்தாண்டி வருவாயா 2 மற்றும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் 
 
அதுமட்டுமின்றி அவர் நான்கு வெப்தொடர்களை இயக்கி வருகிறார். குயீன் 2’ உள்பட இந்த தொடரின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை நகரத்து சப்ஜெக்ட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து கதையை எழுதி வந்த கவுதம் மேனன் தற்போது முதல் முறையாக கிராமத்து கதை ஒன்றை படமாக்க உள்ளார்கள்
 
முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதை என்றும் ஒரு காட்சிகூட நகரத்தில் இந்த படத்தின் காட்சிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இது திரைப்படமா? அல்லது வெப்சீரிஸா? என்று தெரியவில்லை 
 
கெளதம் மேனன் கிராமத்து கதையம்சம் கொண்ட கதையை எழுதி முடித்துவிட்டதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரும், நாயகியாக நயன்தாராவும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments