Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கௌதம் மேனன்… இணையத்தில் வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன கௌதம் மேனன்… இணையத்தில் வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
, திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:30 IST)
இயக்குனர் மோகன் ஜி இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தனது முதலாவது படத்திலேயே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன் ஜி. நாடக காதல் அதன் பின்னால் இயங்கும் கும்பல் என்ற கருவை வைத்து இவர் இயக்கிய “திரௌபதி” படம் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் மோகன் ஜி தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த படம் சாதிய மேலாதிக்கம் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் அவர் இயக்கும் இரண்டாவது படமான ருத்ர தாண்டவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும் அந்த படத்தில் விலலனாக நடிக்க கௌதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். சாதிய கருத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளலாமா என இணையத்தில் அவரை தாக்கி கண்டனங்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமரிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்! – அஜித் வெளியிட்ட அறிக்கை!