Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு படத்தில் வில்லனாக கௌதம் மேனன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிம்பு படத்தில் வில்லனாக கௌதம் மேனன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
, வியாழன், 28 ஜனவரி 2021 (16:50 IST)
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் இப்போது வில்லனாக நடிக்க இயக்குனர் கௌதம் மேனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை தயாரிப்பாளர் கே ஞானவேல் ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிசையாக தெலுங்கு படங்களை ஒளிபரப்பும் சன் டிவி! காரணம் இதுதானா?