Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் & ரஜினி என் படத்தில் நடிக்க தயங்குவது ஏன்? கௌதம் மேனன் பதில்!

விஜய் & ரஜினி என் படத்தில் நடிக்க தயங்குவது ஏன்? கௌதம் மேனன் பதில்!
, செவ்வாய், 2 மார்ச் 2021 (09:45 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ரஜினி மற்றும் விஜய் நடிக்க தயங்குவது ஏன் என அவர் பதிலளித்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் திரையுலகிற்குள் அறிமுகமாகி இருபது ஆண்டுகளைக் கடந்துள்ளார். இப்போது கடுமையான பொருளாதார சிக்கல்களில் இருக்கும் அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்தபேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் விஜய்க்கு ஆகியோருக்கு கதை சொல்லி ஆனால் அது படமாக்கப்படாமல் போனது.

இந்நிலையில் இப்போது கௌதம் மேனன் தன் படத்தில் நடிக்க ரஜினி மற்றும் விஜய் தயங்குகிறார்கள் என்பது குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன். அதில் ‘அவர்கள் என் படத்தில் நடித்தால் அது அவர்கள் படமாக இருக்காது என்றும் என்படமாக இருக்கும் என நினைக்கிறார்கள் போல’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஏலே… ரசிகர்கள் உற்சாகம்!