இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் டிஜிட்டலில் புத்துருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப் படங்கள் 7 ரிலீஸான நிலையிலும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “விரைவில் வேட்டையாடு விளையாடு 2 படத்துக்கான வேலைகள் தொடங்கும். கமல் சாரிடம் இது குறித்து பேச உள்ளேன். எனது போலீஸ் கதாபாத்திரங்களான சூர்யா நடித்த அன்பு செல்வன், அஜித் நடித்த சத்யதேவ் மற்றும் கமல்ஹாசன் நடித்த ராகவன் ஆகிய கதாபாத்திரங்களை இணைத்து ஒரு படத்தில் கொண்டுவரும் விதமாக ஒரு திட்டம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
கௌதம் மேனனின் இந்த அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதெல்லாம் அடுத்த கட்டத்துக்கு செல்லுமா என்பதும் கேள்விக்கு உரியதுதான்.