Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன இப்படி சொல்லிட்டாரு… துருவ நட்சத்திரம் ரிலீஸ் பற்றிய கேள்விக்கு கௌதம் மேனனின் பதில்!

என்ன இப்படி சொல்லிட்டாரு… துருவ நட்சத்திரம் ரிலீஸ் பற்றிய கேள்விக்கு கௌதம் மேனனின் பதில்!

vinoth

, வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:18 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் சமூக வலைதளப் பக்கத்தில் படம் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதற்குக் காரணம் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் வாங்கி இருந்த கடனைக் கட்டாததுதான் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து படம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கௌதம் மேனன் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது அவர் இயக்கிய மற்றொரு படமான ஜோஷ்வா திரைப்படம் மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரிடம் துருவ நட்சத்திரம் படம் எப்போது ரிலீஸ் ஆகும் எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ஆர்வமே இல்லாமல் “வரும். துருவம் வரும்” என சொல்லிவிட்டு அந்த கேள்வியை கடந்துவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவன் பற்றி பதிவிட்டு நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி!