Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக கிராமத்துக் கதையை கையில் எடுக்கும் கௌதம் மேனன்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:15 IST)
இயக்குனர் கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. முதலில் இந்த படத்துக்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பிறகு கதை மாற்றப்பட்டதால் தலைப்பும் மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் சிம்பு ஒரு ஆடு மேய்க்கும் இளைஞன் பொன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். இதனால் இது ஒரு கிராமத்துக் கதையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கௌதம் மேனன் இதுவரை கிராமத்துப் பின்புலம் கொண்ட கதைகளை இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments