கவுதம் மேனனுக்கு ஜோடியாக அமலாபால்
ஐசரி கணேஷ் அவர்களின் தயாரிப்பில் உருவாகிவரும் ஆந்தாலஜி திரைப்படம் ஒரு குட்டி லவ் ஸ்டோரி. இந்த ஆந்தாலஜி படத்தை கௌதம் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல்.விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய 4 இயக்குனர்கள் 4 பாகமாக இயக்கி வருகின்றனர்
இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் பகுதியில் அவரே ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நலன் குமாரசாமி இயக்கும் பகுதியில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது பகுதியின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவு அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
ஏ.எல். விஜய் இயக்கும் பகுதியில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை என்றும் அதில் மேகா ஆகாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெங்கட் பிரபு இயக்கும் பகுதியில் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது
மேலும் இந்த ஓடிடிக்காக எடுக்கப்பட்டாலும் படம் சிறப்பாக வந்திருப்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது