“நான் தான் முதலில் காதலை சொன்னேன்..” கௌதம் கார்த்திக் பகிர்ந்த சீக்ரெட்!

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (08:55 IST)
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் அவர்களின் திருமணம் வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் காதலர்கள் ஜோடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய கௌதம் கார்த்திக் “நான்தான் முதலில் மஞ்சிமாவிடம் காதலை தெரிவித்தேன். அவர் இரண்டு நாட்கள் கழித்து சம்மதம் தெரிவித்தார். திருமணத்தில் குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் படி நடத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments