ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் உருவான செல்ஃபி திரைப்படம் நல்ல கவனத்தைப் பெற்றதையடுத்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்பி திரைப்படம் நல்ல கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தினை வெற்றிமாறனின் உதவியாளரான மதிமாறன் இயக்கினார். நீட் தேர்வுக்குப் பின்னர் கல்லூரிகளில் எப்படி கல்வி வியாபாரப் பொருளாக மாறியுள்ளது என்பதை தோலுரித்துக் காட்டும் விதமாக இந்த படம் உருவாகி இருந்தது.. கௌதம் மேனன் மற்றும் ஜி வி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது.
இந்நிலியில் இந்த படத்துக்குப் பிறகு மீண்டும் ஜி வி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் கூட்டணி மற்றொரு படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் மற்றும் டைட்டில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து தற்போது படத்தின் புதிய போஸ்டரோடு தலைப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு 13 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.