Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடங்கி கிடக்கும் கமலை பார்க்க வேதனையாக இருக்கிறது: கௌதமி

முடங்கி கிடக்கும் கமலை பார்க்க வேதனையாக இருக்கிறது: கௌதமி
, வெள்ளி, 29 ஜூலை 2016 (12:06 IST)
சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் பிசியாக இருந்த கமல் தற்போது மருத்துவமனையில் முடங்கி கிடக்கிறார். அவரை அப்படி பார்க்க மனது வேதனையாக இருப்பதாக நடிகை கௌதமி கூறியுள்ளார்.


 
 
சில வாரங்களுக்கு முன்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து நடிகர் கமல் காலுல் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.
 
காலில் அறுவைசிகிச்சை மேற்கொண்ட கமல் குறைந்தது ஒரு மாத காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஓய்வில் இருக்கும் நடிகர் கமலை நடிகை கௌதமி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.
 
எப்பொழுதும் பிசியாக இருக்கும் கமல் தற்போது ஒரே இடத்தில் முடங்கி கிடப்பது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என கமலின் உடல்நிலை குறித்து நடிகை கௌதமி கூறியுள்ளார். மேலும் கபாலி திரைப்படம் குறித்து கமல் எழுதியதாக கூறப்படும் கடிதம் போலியானது எனவும், அவர் கபாலி படத்தை இன்னமும் பார்க்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமசாமிடா... கபாலிக்கே பிளேடு போட்ட ட்ராபிக் ராமசாமி