Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவைக் கேள்வி கேட்கும் கங்கை அமரன் SPB சரண் விஷயத்தில் அமைதியாக இருந்தது ஏன்?- நெட்டிசன்ஸ் கேள்வி!

vinoth
சனி, 14 ஜூன் 2025 (08:55 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதே சமயம் சின்மயியையும் பலரும் ஒதுக்கிவிட்டனர். அவருக்கும் முன்பு போல பாடல் வாய்ப்புகள் பெரிதாகக் கிடைப்பதில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சின்மயி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் பாடலாசிரியர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது சின்மயி- வைரமுத்து விவகாரம் தொடர்பாக அவர் தனது ஆதரவை சின்மயிக்கு அளித்தார். அதில் பேசும்போது “வைரமுத்து நல்ல கவிஞர். ஆனால் நல்ல மனிதர் இல்லை. அவர் ஆரம்பகாலத்தில் இருந்து எனக்கு நண்பர்தான். ஆனால் ஒரு தவறு செய்தால் அதைத் தட்டிக் கேட்க வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வீடியோ துணுக்கு இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்ஸ் சிலர் இப்போது கங்கை அமரனிடம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சோனா, பாடகர் எஸ் பி பி சரண் மீது இதே போன்ற குற்றச்சாட்டை வைத்தார். எஸ் பி பி சரண், கங்கை அமரனின் நெருங்கிய நண்பரான எஸ் பி பி பாலசுப்ரமணியத்தின் மகன். ஆனால் அப்போது கங்கை அமரன் தட்டிக் கேட்காமல் அமைதியாகதானே இருந்தார். வைரமுத்துவைக் கண்டிப்பது போல எஸ் பி பி சரணையும் அவர் கண்டிப்பாரா? என கண்டனம் தெரிவித்து வருகொன்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

இன்னும் 50 நாட்கள்… ரிலீஸ் குறித்த அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Waiting இயக்குனரே… கருப்பு படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றிய சூர்யாவின் பதிவு!

அடுத்த கார் ரேஸ் பந்தயத்துக்குத் தயாரான அஜித் குமார்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments