Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காப்புரிமை விஷயம். இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்

காப்புரிமை விஷயம். இளையராஜாவுக்கு கங்கை அமரன் கண்டனம்
, ஞாயிறு, 19 மார்ச் 2017 (22:33 IST)
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வரும் பாடகர் எஸ்பிபி தான் இசையமைத்த பாடல்களை பாடக்கூடாது என்று இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.



 


இசைஞானியின் இந்த நடவடிக்கைக்கு ஃபேஸ்புக், டுவிட்டரில் ஆதரவும் எதிர்ப்பும் கிடைத்து வரும் நிலையில் இளையராஜாவின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன், தனது சகோதரரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
”இளையராஜாவின் இசை மழையைப் போன்றது. அதனை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். இளையராஜாவின் இசையை மக்கள் அனைவரும் ரசிக்கின்றனர். தனது இசைக்கு இளையராஜா காப்புரிமை கேட்பது முறையல்ல. இது முட்டாள்தனமானது

அப்படி பார்த்தால் அவரது இசைக்கு நான் எத்தனையோ பாடல்களை எழுதியுள்ளேன். அந்த பாடல் வரிகளை எல்லாம் இளையராஜா பயன்படுத்த கூடாது என்று கூறினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘இனி இளையராஜாவின் பாடலை பாட மாட்டேன்’ - எஸ்.பி.பி. அறிவிப்பால் தமிழ் சினிமாவிற்கு சோதனை