Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன் இளவரசியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஜிவி பிரகாஷின் மகள் பெயர் தெரியுமா?

Advertiesment
உன் இளவரசியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஜிவி பிரகாஷின் மகள் பெயர் தெரியுமா?
, வெள்ளி, 15 மே 2020 (20:18 IST)
ஜி வி பிரகாஷ் மிக இளம் வயதில் இசையமைப்பாளராக கோலிவுட்டில் அறிமுகமாகி தரமான இசையால்  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பின்னர் இவர் நடிகராகவும் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களுக்கு பாடல் பாடிக்கொடுப்பது, இசையமைப்பது என இருவரும் கேரியரில் பிசியாக இருந்து வந்தனர். இந்த ஜோடியின் காம்போவில் உருவான அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான். கடைசியாக அசுரன் படத்தில் இடம்பெற்ற "எள்ளு வய பூக்கலையே" என்ற பாடல் ஜிவி இசையில் சைந்தவி தன் காந்தம் போன்ற குரலால் அனைவரையும் ஈர்த்துவிட்டார்.

இதற்கிடையில் கடந்த மாதம் தான் இந்த தம்பதிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டின் ஹேப்பி நியூஸ் ஆக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பிரபல பிக்பாஸ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது இன்ஸ்டாகிராமில் மனைவி நிஷா மற்றும் சைந்தவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு " சைந்தவி... உன் இளவரசி அன்வி (Anvi)-ஐ காண லாக்டவுன் எப்பொழுது முடியும் என்று ஆவலுடன் இருக்கிறேன். என கூறி பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜிவி - சைந்தவி மகளின் பெயர் அன்வி என்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்க்குலம் சொல்லும் தீர்ப்பு மிக விரைவில்: கமல்ஹாசன் டுவீட்