Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் ஓடிடி மற்றும் தொலைக்காட்சியில் ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’!

vinoth
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (08:53 IST)
இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்'  நேற்று ரிலீஸானது.  படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார்.

கடலை மையமாக வைத்து ஒரு ஹாரர் த்ரில்லர் கதையாக ‘கிங்ஸ்டன்’ உருவானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தை ஜி வி பிரகாஷே தயாரித்திருந்தார். படம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவில் உருவானதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் படம் ரிலீஸானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. படத்தில் பேயைக் காட்டினால் பயம் வரணும். சிரிப்பு வரக் கூடாது என நெகட்டிவ்வான ட்ரோல் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதே போல ரசிகர்களையும் பெரியளவில் இந்த படம் திரையரங்குக்குள் இழுக்கவில்லை. இந்நிலையில் இந்த படம் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ரிலீஸாகவுள்ளது. ஏப்ரல் 13 ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் இந்த படத்தில் வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் ஜி தமிழ் தொலைக்காட்சியிலும் ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments