Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் அரிசி ருசிய பாத்துடுச்சு… கண்டிப்பா அந்த யானை திரும்பி வரும்… ஜி வி பிரகாஷின் கள்வன் பட டிரைலர் ரிலீஸ்!

vinoth
சனி, 23 மார்ச் 2024 (15:17 IST)
ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில் இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.  இவானா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. கிராமத்துக்கு அருகே இருக்கும் காடு ஒன்றில் யானை புகுந்து விட அதை பிடிக்க கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். அந்த சமயத்தில் ஜி வி பிரகாஷும் அவர் நண்பரான தினாவும் ஏதோ திருட முயல நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக சொல்லியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

விஜய்யின் அடுத்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை… லேட்டஸ்ட் தகவல்!

இளையராஜா பயோபிக்குக்காக ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!

ரஜினி பாணியை அப்படியே பின்பற்றிய இந்தி ஸ்டார் நடிகர்! - தடை விதித்த நீதிமன்றம்!

'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments